பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகா இணைந்தால் சமுதாயத்திற்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்!

ஜொகூர் பாரு செப் 8-
தொடர்ந்து ஏமாற்றங்களால் பெரும் அதிருப்தியில் இருக்கும் ம இகா சரியான முடிவை எடுத்து பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இணைய வேண்டும் என்று ஜொகூர் மாநில பெர்சத்து கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் முக்கிய தலைவர் சந்திரசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய முன்னணியில் அதிகம் ஓரங்கட்டப்பட்ட கட்சியாக ம இகா இருக்கிறது.

இந்திய சமுதாயம் நலன் கருதி ம இகா தலைவர்கள் தொடர்ந்து பலமுறை கேள்விகளை எழுப்பினர். ஆனால் தேசிய முன்னணி மற்றும் அம்னோ எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு எழுத காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே சமுதாயம் மற்றும் நாட்டு மக்களின் நலன் கருதி ம இகா நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles