டத்தோ விருது பெற்ற முருக வேலுக்கு பாராட்டு விழா!

ஷா ஆலம், செப் 11-
மலாக்கா மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு ம இகா ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும் மத்திய செயற்குழு உறுப்பினருமான முருகவேலுக்கு டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு ஷா ஆலம் ம இகா தொகுதி தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று முன்தினம் பாராட்டு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில ம இகா செயலாளர் சசிதரன், இளைஞர் அணி தலைவர் சுகன் மற்றும் ம இகா மத்திய செயற்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முருகவேல் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த டத்தோ விருது வழங்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது என்று பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles