
சிரம்பான் செப் 12-
தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தை பிரதிநிதித்து 21 மாணவர்கள் கலந்துக் கொண்டு தேசிய நிலையில் 2ஆவது நிலையில் வந்தனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இவ்வெற்றியை பெறுவதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தேசிய ரீதியில் நடைப்பெறும் செந்தமிழ் விழாவில் 2ஆவது நிலையில் வந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் நிலையில் வெற்றிப்பெற அனைத்து மூயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று மாணவர்கள் உறுதி அளித்தனர்.
இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற நெகிரி செம்பிலான் குழுவுக்கு நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

