




செமினி, செப். 13-
இங்குள்ள டுனடின் தோட்ட
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்
அபிராமி அந்தாதி பெருவிழா மிகவும் நேர்த்தியாகக் கொண்டாடப்பட்டது.
ஆலய நிர்வாக ஏற்பாட்டில் முதன் முறையாக
செப்டம்பர் 7ஆம் தேதி மிகவும் பக்தி பூர்வமாக இவ்விழா நடைபெற்றது என
ஆலயத் தலைவர் வாசுதேவன் குட்டி கிருஷ்ணன் தெரிவித்தார்.
அதிகாலையில் அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 101 அபிராமி அந்தாதி பதிகங்கள் பாராயணம்
தேவார நாயகன் டாக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் மங்கள ஓசையுடன் ஓதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான உபயக்காரர் ப்ரோ லைன் குரூப் ஆஃப் கம்பெனி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
இப்பூஜையை சிவ ஆகம முறையில் சிவஸ்ரீ ரவி குருக்கள் வழி நடத்தினார். இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு 108 புடவைகள் சீராக வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு வழிபாட்டு பூஜையில் செமினி வட்டார பி 40 சார்ந்த 15 குடும்பங்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.
இப்பூஜையில் ஆலய நிர்வாகத்தினருடன்
உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் ராஜன் முனுசாமி,
மலேசிய இந்து சங்கத்தின் செமினி வட்டார பேரவையின் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் செர்டாங் வட்டார பேரவையின் ஸ்ரீசந்துரு கணேசன் மற்றும் வட்டார சமய ஆர்வலர்கள் பக்தர்கள் ஆலய பொறுப்பாளர்கள், நன்கொடையாளர்கள் என
சுமார் 450 பேர் கலந்து கொண்டு அருள்மிகு அபிராமி அம்மனின் திருவருள் பெற்றனர்.
இவ்விழாவிற்கு பேரதரவை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு ஆலய நிர்வாக சார்பாக ஆலய தலைவர் வாசுதேவன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

