தீபாவளி நெருங்கி விட்டது! அந்நியத் தொழிலாளர்களை விரைந்து கொடுங்கள்!டத்தோ ஹாஜி ரசூல் – ராஜசேகரன் வேண்டுகோள்

கோலாலம்பூர் செப் 13-.
வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தீபாவளி பெருநாள் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வரும் வேளையில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு வேவை செய்ய அந்நியத் தொழிலாளர்களை விரைந்து கொடுங்கள் என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மற்றும் மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு வேவை செய்ய 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

ஆனால் 30 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு கிடைத்துள்ளன.

சிகை அலங்காரம், நகைக் கடைகள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவை படுகிறார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் விரைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் Gantian எனப்படும் மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் அவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles