
மா.பவளச்செல்வம்
கோலாலம்பூர் செப் 13-
மலேசியத் திருநாட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க நகைகள் விற்பனைக்கு பெயர் போன கேவிடி கோல்ட் டைமன்ஸ் மற்றும் கேவிடி தங்க மாளிகையின் நான்காவது கிளை இன்று கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.
கேவிட் தங்க மாளிகை குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் தங்கத்துரை தலைமையில் நடைபெற்ற மாபெரும் விழாவில் முக்கிய பிரமுகராக கலந்து கொண்ட ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக கேவிடி தங்க மாளிகையை திறந்து வைத்தனர்.
மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹவகர் அலி, முன்னாள் செனட்டர் சுரேஸ் சிங், லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் வேலாண்டி, செயலாளர் இராஜன், காரசாரம் உணவக உரிமையாளர் ஸ்ரீதரன், கன்னிகா கோல்ட் தஙக கடை உரிமையாளர் டத்தோ விக்கி, டத்தோ ஆணி முத்து, மகிமா தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேவிடி கோல்ட் டைமன்ஸ் தங்க மாளிகையின் நான்காம் ஆண்டை இன்று மஸ்ஜித் இந்தியாவில் 4 ஆவது கிளை திறப்பு விழா கண்டிருக்கிறது.
916 நகைகள் உட்பட அனைத்து வகையான தங்க ஆபரணங்களை வாடிக்கையாளர் நேரடியாக வந்து வாங்கிச் செல்லலாம் என்று இங்கு தங்கத்துரை. கேட்டுக் கொண்டார்.

