

கோலாலம்பூர் செப் 12-
நாட்டில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகளில் ஒன்றாக கிள்ளான் வேலி கால்பந்து கிளப் வலம் வருகிறது.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் நட்பு முறை கால்பந்து போட்டிகளில் கிள்ளான் வேலி பங்கேற்று முத்திரை பதித்து வருகிறது.
புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் காப்பாளராக இருக்கும் கிள்ளான் வேலி கிளப் கடந்த வாரம் இந்தோனேசியா சுலாவாசி மகாசார் நகரில் நடைபெற்ற நட்பு முறை கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நாடு திரும்பியது.
தலைவர் ராஜன் தலைமையில் கிள்ளான் வேலி கால்பந்து கிளப் வெற்றிகரமாக இயங்கி வருவது பாராட்டுக்குரியது.
இந்த தருணத்தில் பந்தாய் தமிழன் கால்பந்து கிளப்பின் ஆட்டக்காரராக வலம் வரும் டிஎன்பி சந்திரசேகரன் அவர்கள் கிள்ளான் வேலி கால்பந்து கிளப்பின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

