
கோலாலம்பூர்,செப்13: பன்னாட்டு மரபுகவிதை மாநாட்டில் புலவர் சங்கத்தின் மேனாள் தலைவர் பாவலர் தமிழ்த்திரு முகிலரசனும் அவரது இணையரும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் பொருளாளருமான டாக்டர் திலகவதியும் சிறப்பிக்கப்பட்டனர்.
மரபுகவிதையில் ஆளுமையும் அதன் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் பங்களித்தவர்களில் ஒருவரான பாவலர் முகிலரசன் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் செயலாளரும் ஆவார்.
தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் அவ்விருவரும் ஆற்றிய பெரும் பங்கங்கிற்கும் சேவைக்கும் இவ்விருது பெரும் சான்றாகும்.
புலவர் சங்கம் மட்டுமின்றி பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சொந்தக் கட்டிடம் வாங்கிய முந்தைய வரலாற்றிலும் இவ்விருவரின் பங்களிப்பும் செயல்பாடும் காலத்தால் போற்றப்பட வேண்டியது என்றால் மறுப்பதற்கில்லை.
கோலாலம்பூர் கிரிஸ்டன் கிராவுன் தங்குக் விடுதியில் நடைபெற்ற பன்னாட்டு மரபுகவிதை மாநாட்டிற்கு முனைவர் குமரவேல் தலைமையேற்ற வேளையில் அம்மாநாட்டை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம இ காவின் தேசிய துணைத்தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
அவ்விருவருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணனு டாக்டர் மனோன்மணிதேவியும் சிறப்பு செய்து விருது அளித்து போற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

