
மலேசிய தமிழ்ச்சமய பேரவையின் ஏற்பாட்டில் ஐந்தாம் தமிழ்ச்சமய மாநாடு 2025 எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு 2056 மடங்கல் 31 (16.09.2025) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் 4.30 மணி வரை பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளதால், மலேசிய தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் துணைத் தலைவர் திரு.ஆனந்த தமிழன் முனியாண்டி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழால், தமிழரால் மெய்யியல் கண்டு, உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து பகுத்து வகுத்து அமைத்த, தமிழ்ச்சமய நிலைகளின் உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகள், நெறிமுறைகள் மற்றும் தமிழர்களுக்கே உரிய உன்னத மரபுகளைக் கடைபிடித்துக் கற்பிக்கப்பட்டதை, வழி வழியே காத்தும் பற்றியும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தார்மீகக் கடமையில் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை களம் கண்டு வருகிறது.
அவ்வகையில் அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்த தமிழ்ச் சமயத்தைக் காத்துத் தாய்த்தமிழிலேயே வழிபாடு என தமிழ்ச்சமய தொன்மையைப் பறைசாற்றுவதோடு “தமிழ்ச் சமய இறையாண்மை”, எனும் கருப்பொருளில் இம்மாநாடு அரங்கேற இருக்கிறது.
இம்மாநாட்டிற்குச் சிறப்பு வருகையாளர்களாக தமிழ்நாட்டிலிருந்து, கோவை திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் கோவை பேரூராதீனத்தின் இருபத்தைந்தாம் குருமகாசந்நிதானங்கள் கயிலைப் புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும்
தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவரும்
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான பேராசான் பெ.மணியரசனார் அவர்களும்
உலகத் தமிழின வரலாற்றுப் பேராய்வாளர் தமிழ்த்திரு. மன்னர் மன்னன் அவர்களும் வருகை தர இருக்கிறார்கள்.
மேலும் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடத்தில் ஏ கிளாஸ் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்தலும் தபால் தலை வெளியீடு விருது வழங்குதலும் மாநாட்டில் இடம்பெறும்.
எனவே இலவயமாக நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கு நாட்டிலுள்ள தமிழர் தேசிய இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புகள், தமிழ்ச்சமய ஆர்வளர்கள், பற்றாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் பண்பாட்டு உடையில் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் என மலேசிய தமிழ்ச்சமய பேரவையின் துணைத் தலைவர் திரு.ஆனந்த தமிழன் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.
புலம்பெயர்ந்த உலகத் தமிழர்களுக்காக பேரவையின் முகநூல் மற்றும் வலையொளி தளத்தில் நேரலையும் இடம் பெறும்.
முகநூல் இணைப்பு
https://www.facebook.com/permalink.php?story_fbid=114584374299888&id=100072449785453
வலையொளி இணைப்பு
Suara WTPS You Tube Channel
https://youtube.com/channel/UCUiXFlvJrc8ubSq7HT80ydw
Tamil Samayam Maanadu
https://youtu.be/sDLaq54YEyo
மலேசியா – 9.00 காலை
இந்தியா – 6.30 காலை
இலங்கை – 7.00 காலை
அமெரிக்கா – 9.00 இரவு
ஆசுரேலியா – 11.00 காலை
கனடா – 9.00 இரவு
இங்கிலாந்து – 2.00 அதிகாலை
தொடர்புக்கு :
திரு மு.ஆனந்த தமிழன்
+60149327025
திரு வீ.பாலமுருகன்
+60143099379
தமிழ்ச்சமய மீட்சியே, தமிழினத்தின் எழுச்சி.!

