தைப்பிங் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் சனாதன தர்ம சபா ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது!

தைப்பிங், செப் 14-
கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணர் பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஒரு இந்து மதப் பண்டிகையாகும். இந்த நாளில், வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டி, பூஜை அறையை அலங்கரித்து கிருஷ்ணர் சிலையை வைத்து வழிபடுவார்கள்.

வீட்டின் வாசலில் அரிசி மாவினால் கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து, அவர் வீட்டிற்கு வருவதாக நம்பிக்கை வைத்து பூஜையை மேற்கொள்வர்.

மேலும் ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் நேற்று தைப்பிங் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் சனாதன தர்ம சபா ஆலயத்தில் கிருஷ்ண ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

Blues Brothers Welfare Association Malaysia கிளப்பின் இளைஞர் அணி தலைவர் டத்தோ டாக்டர் எம்.சங்கர் சிறப்பு பிரமுகராக இந்த விழாவில் கலந்து கொண்டார்.

அவருக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles