
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வம்
ரவாங் செப் 14-
உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் முயற்சியில் உலுசிலாங்கூர் கவுன்சிலர்கள் தலைவர்கள் அனைவரது சாரா உதவி, வசதி குறைந்த 50 குடும்பங்களுக்கு பொருட்களாக வழங்கப்பட்டது.
மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு
18 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்ட மலேசியர்கள் RM100 ரஹ்மா (சாரா) உதவி தொகை திட்டத்தின் கீழ் பொருட்களை வாங்க மடானி நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் முதல் முறையாக இந்த சாரா 100 வெள்ளி திட்டத்தை அறிவித்தார்.
சாரா 100 வெள்ளி என்பது என்பது துன்பத்தை தீர்க்கும் ஒரே மருந்தல்ல, மக்கள் துன்பத்தில் பங்கு கொள்ளும் ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் சான்றாகும்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த உதவி, வாழ்க்கைச் செலவுகளின் சுமையை எளிதாக்குவதற்காக செயல்படுத்தப்படுகிறது.
சாரா உதவி பற்றி நாம் பேசும்போது, உண்மையில் சிலர் விமர்சித்து, ‘RM100 என்ன செய்ய முடியும்?’ என்று கூறுகிறார்கள்.
ஆனால் சாரா 100 வெள்ளி என்பது ஒரு உதவித் தொகையாகும்.
ஒரு வீட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 3 அல்லது 5 பேர் இருந்தால் 300 வெள்ளி முதல் 500 வெள்ளி வரைக்குமான வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.

இனி வரும் காலங்களில் இந்த தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
இன்று ரவாங் வட்டாரத்தில் உள்ள 50 குடும்பங்கள் சாரா 100 வெள்ளி உதவித் தொகையை பயன்படுத்தி ரவாங் மைடின் பேரங்காடியில் பொருட்களை வாங்கி செல்ல டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தலைமையிலான தொகுதி பொறுப்பாளர்கள் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, ஸ்ரீகாந்த் சந்திரகாந்தன், முருகன் வீரபாண்டியன், வோங் சியூ மிங், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி உதவித் தலைவர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டவர்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

