
பீடோர்,செப்15: பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் மாணவர் நலத் துணைத் தலமையாசிரியர் திருமதி.மகேஸ்வரி முருகன் தலைமையாசிரியர் பயிற்சியில் நன் நிலையில் தேர்ச்சி பெற்றார்.
“NPQEL” எனப்படும் அப்பயிற்சியில் சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மகேஸ்வரி அதற்கான சான்றிதழை அண்மையில் சைபர்ஜெயாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் சான்றிதழ் பெற்றார்.
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு மாணவர் நலனிலும் அக்கறையும் ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு பள்ளியின் மேம்பாட்டில் மகேஸ்வரியின் செயல்பாடு தனித்துவமானது என்பது குறிப்பிடத்தக்கது.

