

மலேசியத் தினத்தையொட்டி செராஸ் செலாத்தான் ஏஇயோன் (AEON) பேரங்காடியில் மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா (ஸ்குவாட்ஸ்), தேசிய ரத்த வங்கி மற்றும் செராஸ் செலாத்தான் ஏஇயோன் பேரங்காடி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 89ஆவது முறையாக செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி இரண்டு நாள் ரத்ததான முகாம் நடைபெற்றதாக மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா (ஸ்குவாட்ஸ்) தேசியத் தலைவர் கலைமாமணி டாக்டர் ஆர். பிரேமக் கண்ணன் கூறினார்.

அர்ப்பணிப்புடன்
உயிரைக் காக்கும் தானமே ரத்த தானம். ஒருவர் நன்கொடையாகக் கொடுக்கும் ரத்தமானது முன்று உயிர்களைக் காப்பாற்றும்.
இதுபோன்ற ரத்த தான முகாம் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாட்டிலுள்ள பிற சமுதாயங்களோடு ஒன்றிணைக்கவும்
உதவுமென்றார் அவர். தேசிய ரத்த வங்கியின் ரத்தப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றார் அவர்.

மலேசியத் தினத்தை முன்னிட்டு 89வது ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை சேவைகள் போன்றவை மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது.
இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டோர் குருதி தானத்தை வழங்கி தங்களது பங்களிப்பை பூர்த்தி செய்தனர்.

89ஆவது ரத்த தான முகாமில் சிறப்பு பிரமுகர்களாக ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சியூ கி, டத்தோஸ்ரீ ச. தனசேகரன், மருத்துவர் செல்வராஜா, மருத்துவர்கள் அ. ரவிவர்மா, கௌரி, காஜாங் கவுன்சிலர் ஆர். தியாகராஜா, ஏஇயோன் பேரங்காடியின் திருமதி ஷீலா, ஃபரித், தேசிய ரத்த வங்கியின் மருத்துவர்கள் சபேஹா, அல்வினா ஆகியோருடன் 50 மலேசிய ஸ்குவாட்ஸ் உறுப்பினர்கள், சமூக நல தன்னார்வலர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

