

நாட்டில் பல பகுதிகளில் நகரங்கள துரித வளர்ச்சி கண்டு வரும் நகரையொட்டியுள்ள பல கிராம மக்கள் மற்ற இடங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.
அந்த சூழ் நிலையில் , கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு கோலகங்சார் கம்போங் ஸ்டேஷனில் குடியிருந்த மக்ககள் மீண்டும் சங்கமமாக ஒன்று கூடிய மகிழ்ந்தனர்.
இது முதல் சந்திப்பு, இந்த சந்திப்பில் அந்த கிராமத்தில் வசித்த 110 பேர் மீண்டும் ஒன்று திரண்டு் பழைய நினைவுகளை பகிர்த்துக்கொண்டதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான சேகரன் தெரிவித்தார்.
கிராமம், மற்றும் தோட்டப புறங்களில் வாழ்ந்த வந்த காலம் கடந்ந கால் நினைவுகளை யாராலும் மறக்க முடியது.
அந்த வகையில் கம்போங் ஸ்டேஷனில் இனம் பேதம் இன்றி , பழகி வத்துள்ளதுடன் ஒற்றுமையுடன் அந்த கிராமத்தில் நிகழும் எந்த காரியமாக இருந்தாலும் ஒன்றிணைந்து புரிந்துணர்வோடு வாழ்ந்த வந்த காலம் இனியும் வராது என்று சேகரன் தெரிவித்தார்.
இந்த கிராமத்தில முன்பு வசித்து வெளிநாடுகளில் வசித்து வரும் பலர் இந்த நிகழ்வில் கலத்துக்கொண்டது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.
இதன் ஏற்பாட்டுக் குழுவாக இருந்து சிறப்பான முறையில் செய்த நடவடிக்கை குழு செயலாளர் எஞ்சலினா இன்ப குமாரி , பொருளாளராக ஆர். ராமசாமி செயற குழு உறுப்பினர்களாக கண்ணபிரான், எம் முனுசாமி மற்றும் என் செல்வம் ஆகியோர் வழி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில முத்தவர்களுக்கு கௌரவிப்பு செய்யபட்டதுடன் விருந்து உபசரிப்பு மற்றும் ஆடல் பாடல். ஆகிய நிகழ்வுகளுடன் இனிதே முடிவுற்றது.