ஆதரவு இல்ல 35 குழந்தைகளுக்கு புத்தாடைகளை எடுத்து வழங்கினார் ச.பிரகாஷ்

கோலாலம்பூர், அக் 11-

ஆதரவற்ற இல்ல 35 குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச.பிரகாஷ் அவர்கள் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வழங்கினார்.

கிள்ளான் லிட்டல் இந்தியா பிரபல ஜவுளி கடைக்கு சிறார்களை அழத்துச் சென்று அவர்களுக்கு பிடித்தமான ஆடைகளை அவர் எடுத்து வழங்கினார்.

நம்மைப்போல் அவர்களும் புத்தாடை உடுத்த வேண்டும் என்னும் நோக்கிலும் அவர்களும் மகிழ்ச்சியாக இவ்வருட தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலும் இத்தகைய ஏற்பாடினை தாம் செய்ததாகவும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஷா ஆலம் நடசத்திர விடுதியில் அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக பணமுடிப்பும் சிறார்களுக்கு பிரகாஷ் வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles