
பெட்டாலிங் ஜெயா, செப்.18 -ஹெய்னிகன் மலேசியா பெர்ஹாட் (HEINEKEN Malaysia) நிறுவனம் முன்னெடுத்து வரும் ஸ்டார் அகாடமி (Star Academy) திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
1,300-க்கும் மேற்பட்ட தகுதியான பார்டெண்டர்களை உருவாக்கும் நோக்கில், இந்த திட்டம் சிலாங்கூர், பேராக், ஜொகூர், பினாங்கு, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மார்ட்டிஜ்ன் வான் கீலன் (Martijn van Keulen) தெரிவித்துள்ளார்.
2018 முதல் இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட பார்டெண்டர்கள் பெர்பெக்ட் பூர் (Perfect Pour) கலையை கற்றுள்ளனர். இதனால் நிறுவனத்திற்கு பரவலான பாராட்டுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது 8 ஆவது ஆண்டாக நடைபெறும் ஸ்டார் அகாடமி திட்டம், உள்ளூர் திறமையாளர்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்கி, மலேசிய சுற்றுலாத் துறையை வளப்படுத்தக்கூடிய எதிர்கால பார்டெண்டர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பயிற்சி திட்டத்தின் வழி அனைத்துலக தரம் வாய்ந்த பார்டெண்டர்களை உருவாக்குவதோடு, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வாய்ப்பையும் ஏற்ப்படுத்த முடியும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.