
பிரெஸ்மாவின் 21ஆவது ஆண்டுக் கூட்டம் வரும் அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ளது. அதன் தலைமை செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் பின் ஷஹூல் ஹமீது இதனை கூறினார்.
பிரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும்.
அவ்வகையில் 2025ஆம் ஆண்டுக்கான ஆண்டுக் கூட்டம் வரும் அக்டோபர் 8ஆம் தேதி மதியம் 2 மணி முதல் கோலாலம்பூர், மாட்ரேட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உறுப்பினர்கள் சந்தாவை இணையம் அல்லது நேரடியாக அலுவலகத்தில் வந்து செலுத்தலாம். குறிப்பாக ஆண்டுக் கூட்டத்தின் போது நெரிசலை தவிர்க்க அவர்கள் சந்தாவை முன்கூட்டியே செலுத்த வலியுறுத்தப்படுகின்றனர்.
மேலும் தீர்மானத்திற்கான பாரங்கள் மின்னஞ்சல், வாட்சாப் வாயிலாக உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீர்மானம் கொண்டு வர எண்ணம் கொண்டவர்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அப் பாரங்களை திருப்பி அனுப்ப வேண்டும்.
ஆகவே, உறுப்பினர்கள் அனைவரும் திரளாக வந்து ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைமை செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் பின் ஷஹூல் ஹமீது கூறினார்.