
இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இசை ஆளுமையாகத் திகழ்ந்த இசைமுரசு நாகூர் ஹனீஃபா அவர்களின் நூற்றாண்டு விழா மாஹ்சா பல்கலைக்கழகத்தில் மதிப்பிற்குரிய செனட்டர் தான்ஸ்ரீ ஹனிஃபா அவர்களின் ஏற்பாட்டில், மாண்புமிகு டத்தோஸ்ரீ சரவணன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சௌஜானா புத்ராவில் அமைந்துள்ள மாசா மருத்துப் பல்கலைக்கழக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முழுநாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைப்பப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் சர்வதேச பேச்சாளர்கள் கவியருவி அப்துல் காதர், பேராசிரியர் அப்துல் சமது, கம்பம் பீர் முஹம்மது பாகவி கலந்துகொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நாகூர் ஹனீஃபா அவர்கள் பாடிய பாடல்களின் இசைக் கச்சேரியும் நடைபெறும். இதில் நெல்லை அபூபக்கர், சூப்பர் சிங்கர் புகழ் ஃபரீதா, ராஜபாட் ராஜா முஹம்மது, ஹாஜி செய்யது அலி, ஏ ஆர் ஹாஜா ஆகியோர் பாட இருக்கின்றார்கள். இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் இசைக்க இருக்கின்றார்கள்.