இந்திய சமூக நலனில் அக்கறை கொண்ட செத்தியா காசே மகளிர் மற்றும் இளஞர் நல அமைப்பு, சுங்கைபட்டாணியில் புதிய கிளை தொடக்கியது.

சுங்கைபட்டாணி, செப் 20-

நாட்டின் பல பகுதிகளில் ஓரங்கட்டப்பட்டு வரும் இந்தியர்களின் அவலநிலையை குறித்து கவலைக் கொண்டிருக்கும் தலைநகரை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘செத்தியா காசே மகளிர் மற்றும் இளஞர் நல அமைப்பு கெடா சுங்கைபட்டாணியில் தனது கிளையைத் தொடங்கி உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பே தாம் இந்த அமைப்பினை தொடங்கி இருந்தாலும் தங்களது சேவை உறுதி மிக்கதாக இருக்கும் என அதன் அமைப்பின் தலைவர் கே.செல்வி தெரிவித்தார். தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் இந்திய சமூக நல மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த அதிக அக்கறை எடுத்திருப்பதாக அவர் சொன்னார்.

இங்குள்ள காந்தி நினைவு மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய செல்வி 30 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பட்ட முறையில் தாம் சமூகப்பணிகளில் ஈடுப்பட்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
சமூகப்பணிகளுக்கு நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கும், அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் இத்தகைய சந்திப்பு நிகழ்சிகள் சிறந்த வாயிலாகும்.
நாங்கள் வெறும் நிதியுதவி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் உறுப்பினர்கள் தாங்களே நிலையான வருமான உருவாக்கவும் வழிகளையும் ஏற்படுத்த உள்ளோம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் சுங்கைபட்டாணி நாடாளுமன்ற உறுபினர் முகமட் தஃபிக் தான்ஶ்ரீ ஜோஹரி சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டார்.
இரண்டு சமூக நல இல்லங்களுக்கு பண உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles