
கோலாலம்பூர் செப். 20; நாடுதழுவிய நிலையில் தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் நடத்திய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வட மற்றும் மத்திய மண்டல போட்டிகள் நடந்து விட்டன. எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஜோகூர் சிகாமாட் (சஹா) சந்துமான் தமிழ்ப்பள்ளியில் நடைபெறும். தென் மண்டலமான நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் வட்டாரத்தைச் சேர்ந்த 25 சிறந்த கட்டுரையாளர்களுக்கான நேரடிப் போட்டி இதுவாகும். அப்போது கொடுக்கப்படும் தலைப்புகளில் மாணவர்கள் கட்டுரை எழுதுவர்.
வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரி. ம. 1,000.00, இரண்டாம் பரிசு ரி. ம. 700.00, மூன்றாம் பரிசு ரி. ம. 500.00. அதோடு, 5 ஆறுதல் பரிசாக ரி. ம. 100.00 வீதம் வழங்கப்படும். முதல் பரிசுகளைப் பெறும் மாணவர்களின் பள்ளிகளுக்கும் வெற்றிக் கோப்பைகள், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும். நேரடியாக போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு டீ- சட்டைகளும் சான்றிதழும் வழங்கப்படும். அதோடு நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்து செலவுத் தொகை, உணவு ஆகியவையும் கொடுக்கப்படும். சேகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு யுனேஸ்வரன் தலைமை வகித்து பரிசுகளை வழங்குவார். தேர்வுப் பெற்றவர்கள் பிவருமாறு:
தென் மண்டலம்
பெயர் தமிழ்ப்பள்ளி
- வினோச்சான் முத்தையா நீலாய், நெகிரி
- சி. சிவதாரண்யா யாய்யா, ஜோகூர் பாரு
- வி. பினா ஸ்ரீ யாய்யா, ஜோகூர் பாரு
- வ. பிரதீப் லாபிஸ் ஜோகூர்
- யு. கவிராஜ் யாய்யா, ஜோகூர் பாரு
- திவாஷினி மணிக்குமரன் யாய்யா, ஜோகூர் பாரு
- வி. டிவினா யாய்யா, ஜோகூர் பாரு
- வா. கிருதிகா யாய்யா, ஜோகூர் பாரு
- காவியமித்ரா ஜெயகோபி யாய்யா, ஜோகூர் பாரு
- சு. கெளரித்தா யாய்யா, ஜோகூர் பாரு
- நிரல்யா கிருஷ்ணன் யாய்யா, ஜோகூர் பாரு
- தேவஸ்ரீ யாய்யா, ஜோகூர் பாரு
- வி. அஸ்மித்தா ஆலோர் காஜா மலாக்கா
- ஸ்ரீ லிஷானேகா செயிண்ட் ஜோசப் ஜோகூர் பாரு
- யுக்தா விக்னேஸ்வரன் யாய்யா, ஜோகூர் பாரு
- ச. தர்ஸ்வின் யாய்யா, ஜோகூர் பாரு
- யாஷ்மித்ராசாய் நீலாய், நெகிரி
- ஜனசிகா ஆலோர் காஜா மலாக்கா
- கு. தீரன் லாபிஸ் ஜோகூர்
- மே. ஷர்ஜினி லாபிஸ் ஜோகூர்
- கோகுளராசன் கோவிந்தன் சந்துமான், சிகாமாட்
- ஜெகதீஸ்வரி கதிரேசன் சந்துமான், சிகாமாட்
- நிஷிக்கா சிவகுமார் சந்துமான், சிகாமாட்
- ஜமுனா ரவி சந்துமான், சிகாமாட்
- சுரேந்திரன் ராஜா சந்துமான், சிகாமாட்
மேல் விபரம் பெற வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் (012-6589252) அல்லது அறங்காவலர் திரு. பரமசிவம் (011-35231429) ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம் என்று தமது பத்திரிகைச் செய்தியில் வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் குறிப்பிட்டார். மின்னஞ்சல் முகவரி: tamilschoolCAF@gmail.com.
ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
இந்தச் செய்தியை தயவு செய்து தங்கள் பத்திரிக்கையில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
நன்றி அன்புடன்
வே. விவேகானந்தன்,
தலைவர்,
தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம்
18.9.2025

