

சுங்கை பட்டாணி, செப் 20-
கெடா மாநில மஇகா விளையாட்டுப் பிரிவு தலைவர் மற்றும் கெடா கடாராம் கால்பந்து எஃப்.சி. கிளப் தலைவர் ஹென்றி ஏற்பாட்டில் தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் கிண்ண கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கெடாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 24 மாணவர்கள் குழு மற்றும் 12 மாணவிகள் குழு இதில் கலந்து கொண்டது.
7ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டி அனைவரையும் கவர்ந்தது.இந்தப் போட்டியின் தொடக்க விழாவுக்கு கெடா மாநில மஇகா தலைவர் எஸ். சுரேஸ் தலைமை தாங்கினார்.

முகமது ஹனாஃபி அப்துல் ரஹ்மான் (துணை விளையாட்டு இயக்குநர், கெடா இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை) மற்றும் கார்த்திகேசன் (முதன்மை இயக்குநர், மாணவர் மேம்பாட்டுத் துறை, கெடா ஜேபிஎன்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட் சிறப்பு வருகை தந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

கெடா மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டி நடைபெற்றது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.