



ஈப்போ, செப் 20-
இந்நாட்டில் ஆலயங்களில் குறிப்பாக ஆலய கும்பாபிஷேங்களை நடத்த உள் நாட்டு அர்ச்சகர்களை வைத்து வழி நடத்தப்பட வேண்டும் என்று பேரா மாநில இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஆ. சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
பேரா மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் நடத்தப்படும் கும்பாபிஷேகம் நடத்த போதிய அர்ச்சகர்களின் ஆள் பலம் உள்ளது என்று இந்து அரச்சகர்கள் சங்கம் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
நாட்டில் உள்ள ஆலயங்களில் சமய அடிப்படை அரச்சனைகளை சமய காரியங்களை செய்ய போதிய அனுபவம் பெற்ற அர்ச்சகர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அவர்களை வைத்து சமய பணிகளை செய்ய வாய்ப்புகளை ஆலய நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
பேரா மாநிலத்தில் ஆலயங்களுக்கு குறிப்பாக கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும் ஆலயங்களுக்கு பேரா மாநிலத்திடம் இருந்து நிதி உதவியை வழங்கி வருகிறேன் .
கும்பாபிஷேகம் நடத்தப்படும் ஆலயங்களுக்கு இந்தியாவில் இருந்து வரவழைப்படும் அர்ச்சகர்களுக்கு அதிகமான நிதிகளை வழங்குவதற்கு பதில் குறைந்த செலவில் உள்நாட்டு அர்ச்சகர்களை வைத்து கும்பாபிஷேகங்களை நடத்தலாம என்று ஆலோசனை கூறினார்.
பேரா மாநில இந்து அரச்சகர் சங்கமும் , கம்போங் கபாயாங் சிவசுப்பிரமணியர் ஆலயமும் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி யாகம் நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றிய போது பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான சிவநேசன் இதனை தெரிவித்தார்.
பேரா மாநிலத்தில் சிறப்பான முறையில் தமது சமய பணிகளை நடத்தி வரும் இந்து அர்ச்சகர் சங்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் கல்வியை நடத்தியுள்ளதுடன் 12 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியை வழங்கியுள்ளது மகிழச்சியை அளித்துள்ளதாக கூறி் அச்சங்கத்திற்கு 25 ஆயிரம் ரிங்கிட் நிதி அறிவிப்பை செய்தார்.
இந்நிகழ்வில முன்னதாக தலைமையுரை ஆற்றிய பேரா இந்து அர்ச்சகர் சங்கத் தலைவர் க. தினேஷ் குமார், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்கள தொடர்ந்து நிலை நாட்ட எதிர்கால மாணவர்களின பங்களிப்பு அவசியமாக விளங்குகிறது.
இந்த நாட்டில் தமிழ்பள்ளிகள நிலை நாட்ட அனைவரின் பங்களிப்பு அவசியம் , அந்த வகையில் பேரா அரச்சகர் சங்கமும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.
கம்போங. கப்பாயாங் ஆலய மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தும் முன்பு ஆலயத்தில் நடைபெற்ற கல்வி்யாக நிகழ்வில் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆலயத்தில் விற்றிருக்கும் சிவ சுப்பிரமணியர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது.

