நாளை சீன அசெம்பளி மண்டபத்தில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு !

கோலாலம்பூர் செப் 20-
கருஞ்சட்டை இளைஞர்படை அமைப்பினால் ஒழுங்கமைக்கப்படும் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு மாநாடு 3.0, நாளை மிகச் சிறப்புற நடைபெறவுள்ளது.

திராவிடத் தத்துவமும் பெரியாரின் சிந்தனைகளும் மலேசியச் சமூகத்தில் அதிகரிக்க அவசியம் பெற்றுள்ள இக்காலத்தில், மக்களிடையே விழிப்புணர்ச்சியூட்டும் நோக்கோடு இம்மாநாட்டை கருஞ்சட்டை இளைஞர்கள் நடத்தவிருக்கின்றனர்.

இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இக்கருத்தரங்கின் முதல் பிரிவு கடந்த 17 செப்டம்பர் 2025-இல் மெய்நிகர் வழி நடந்தது.

கருத்தரங்கின் 2ஆவது பிரிவு நாளை 21 காலை 9.00 மணிக்கு மேல் சீன அசெம்பளி மண்டபத்தில் தோழர்களின் ஆதரவுடன் நேரடியாக தேசிய மொழி மற்றும் தமிழ் மொழியில் நடைபெறவிருக்கிறது.

மலேசியர்களிடயே வலுத்துள்ள மத இன நல்லிணக்க பிரச்சனைகளை மாற்று சிந்தனையின் வழி எவ்வாறு கையாளலாம் என்பதை மலாய் மொழியில் இடதுசாரி தோழர்கள் கலந்துரையாடவுள்ளார்கள்.

மேலும், மலேசிய இந்திய சமூகத்தில் நிலவும் சாதிய மனநிலை, பாலின பாகுபாடுகள், மற்றும் இளைஞர்களிடையே அண்மையில் வலுத்து வரும் மத-இன தீவிரவாத போக்குகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் தமிழ் மொழியில் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டான்ஶ்ரீ குமரன் வருகை தருகிறார். இரா.திருமாவளவன் அவர்கள் நிகழ்ச்சியில் திறப்புரை ஆற்றுகிறார்.

தொடர்பு எண்கள்:
தோழர் நாகேன் : 016-5910564
தோழர் யோகி : 016-5432572
தோழர் கௌசல்யா : 011-36321725

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles