கிள்ளானில் MIT தீபாவளி கல்யாணம் பசாரை டான்ஸ்ரீ எம். கேவியஸ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்!

மா. பவளம் செல்வம்

கிள்ளான், செப் 20-
MIT எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் Klang Centro Mall முதல் மாடியில் மாபெரும் அளவில் தீபாவளி கல்யாணம் பசார் நடைபெறுகிறது
என்று செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷான் தெரிவித்தார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவில் 76 கடைகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் இருந்து புத்தம் புதிதாக தருவிக்கப்பட்ட பட்டு சேலைகள், சுடிதார்கள் இங்கு நியாயமான விலையில் விற்பனையில் உள்ளன.

பலகாரங்கள், துணிமணிகள், வலையல்கள் உட்பட பலவிதமான பொருட்கள் இங்கு பரபரப்பான விற்பனையில் இருப்பதாக அவர் சொன்னார்.

இன்று மாலையில் டான்ஸ்ரீ எம். கேவியஸ் சிறப்பு வருகை தந்து தீபாவளி பசாரை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

நாட்டின் புகழ்பெற்ற கலைஞர் டார்க்கி, சந்தேஷ், பாலன் காஷ், அருண் போய், உட்பட மண்ணின் மைந்தர்கள் பங்கேற்கும் இன்னிசை விழா இரண்டு நாட்கள் இடம் பெறும்.

இந்திய இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த தீபாவளி கல்யாணம் பசார் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது செய்யப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய மண்டபத்தில் தீபாவளி கல்யாணம் பசார் நடைபெறுவதால் பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு தரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் போதுமான கழிப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது என்று அவர் சொன்னார்.

இதனிடையே முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தீபாவளி பசார் நாளை இரவு பத்து மணி வரை நீடிக்கும் என்பதால் பொது மக்கள் திரண்டு வந்து தங்களுக்கு பிடித்தமான புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் மற்றும் மலேசிய இந்தியர் உருமாற்ற அமைப்பின் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு தலைவருமான விக்ரம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles