


ஸ்கூடாய், ஜூலை 3-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஸ்கூடாய் சட்டமன்ற தொகுதியில் கார்த்தியாயினி ஜெயபாலன் போட்டியிடுகிறார்.
ஜசெக கட்சியின் சார்பில் இவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஜொகூர் ஸ்கூடாய் தொகுதி மக்களுக்கு மிகவும் பிரபலமான வேட்பாளராக இவர் வலம் வருகிறார்.
தமக்கு 6 அல்லது 7 வயது இருந்த காலத்திலிருந்தே, அரசியல் பொதுக்கூட்டங்களுக்கும் வேட்பாளர் நியமன தினங்களுக்கும் என் தந்தையுடன் சென்று வந்தேன்.
அப்போது நான் ஒரு குழந்தையாகக் கவனித்து, கற்றுக் கொண்டிருந்தேன்.
ஆனால் கடந்த சனிக்கிழமை முதல் இங்கு ஒரு வேட்பாளராக வலம் வருகிறேன்.
இன்று, ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக இங்கு நிற்கிறேன்.
இந்த பயணம் நான் எளிதாக எடுத்த முடிவு அல்ல. இதுவே நான் செய்ய விரும்பும் பணி.
ஸ்கூடாய் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். மாற்றத்தை கொண்டு வர அமைப்பின் உள்ளிருந்து செயல்பட விரும்புகிறேன்.
சமுதாயத்திற்கு பயனளிக்கும் மாற்றங்களை உருவாக்க வேண்டும்; வெளியில் நின்று பார்ப்பதற்காக மட்டும் அல்ல.
இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியும், நான் சுமக்கும் பொறுப்பையும் காக்க வேண்டிய நம்பிக்கையையும் எனக்கு நினைவூட்டுகிறது என்று அவர் சொன்னார்.
கடந்த சில தினங்களாக ஸ்கூடாய் தொகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தொகுதி மக்களிடையே இவருக்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது.
ஸ்கூடாய் தொகுதி யில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றுவேன் என்று அவர் தனது பிரச்சாரத்தின் போது கூறி வருகிறார்.
ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் கார்த்தியாயினி ஜெயபாலன் வெற்றிக்கு பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் கடுமையான பிரச்சாரத்தில் களம் இறங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

