லூக் சலூன் Unisex Hair & Beauty கடை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது!

கோலாலம்பூர் செப் 22-
பிரிக்பீல்ட்ஸ் MRCB வளாகத்தின் முதல் மாடியில் லூக் சலூன் கடை திறப்பு விழா இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னாள் மனிதவள அமைச்சர் மற்றும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார், மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபால கிருஷ்ணன், மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், அம்மன் மெஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ குமார், கேவிடி தங்க மாளிகை குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் தங்கத்துரை,
லூக் சலூன் கடை நிர்வாக இயக்குனர் மகா கணேஷ், மலேசிய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் மற்றும் திருமதி மகேஸ்வரி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய மேளதாளத்துடன் மாண்புமிகு சிவகுமார், டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தேசிய கீதத்திற்கு பிறகு திருமதி மகேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றினார்.

பின்னர் நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் எலிகேட்ஸ் ஆறுமுகம் தனக்குரிய பாணியில் விறுவிறுப்பான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தார்.

முதல் முறையாக மலேசியாவில் லூக் சலூன் கிளையினைத் திறப்பு விழா கண்டது பெருமகிழ்ச்சி அடைகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் மகா கணேஷ் தெரிவித்தார்.

LOOKS சலூன் என்பது இந்தியாவில் 280-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட பிரபலமான Unisex Hair & Beauty பிராண்டாகும்.

இப்போது, மலேசியாவின் கோலாலம்பூரில் எங்கள் உலகத் தரச் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.

உலக தரம் வாய்ந்த லூக் சலூனுக்கு வாடிக்கையாளர் நேரடியாக வருகை தந்து தங்களுக்கு ஏற்ற வகையில் முக அலங்காரம் மற்றும் சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

இதனிடையே சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் Unisex Hair & Beauty துறையில் இந்திய இளைஞர் மகா கணேஷ் கால் பதித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நம்மவர்களும் இதுபோன்ற துறைகளில் துணிந்து இறக்க வேண்டும்.
Unisex Hair & Beauty தொழில் துறைகளுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles