லூக் சலூன் கடை திறப்பு விழாவில் எலிகேட்ஸ் ஆறுமுகம் பாடிய பாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கோலாலம்பூர் செப் 21- பிரிக்பீல்ட்ஸ் MRCB கட்டடத்தின் முதல் மாடியில் லூக் சலூன் கடை திறப்பு விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார், மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபால கிருஷ்ணன், மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், அம்மன் மெஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ குமார், லூக் சலூன் கடை நிர்வாக இயக்குனர் மகா கணேஷ் மற்றும் திருமதி மகேஸ்வரி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் எலிகேட்ஸ் ஆறுமுகம் தலைமையிலான கலைஞர்கள் விறுவிறுப்பான பாடல்களை பாடி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர்.

Sampaikan Salam மற்றும் சுராங்கானி பாடலை தனக்குரிய பாணியில் எலிக்கேட்ஸ் ஆறுமுகம் பாடிய போது அனைவரும் உற்சாகமாக கைத்தட்டி ஆராவாரம் செய்தனர்.

முதல் முறையாக மலேசியாவில் லூக் சலூன் கிளையினைத் திறப்பு விழா கண்டது பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று மகா கணேஷ் தெரிவித்தார்.

LOOKS சலூன் என்பது இந்தியாவில் 280-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட பிரபலமான Unisex Hair & Beauty பிராண்டாகும்.

இப்போது, மலேசியாவின் கோலாலம்பூரில் எங்கள் உலகத் தரச் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles