35 ஆண்டுகளுக்கு பிறகு நெகிரி மாநிலத்திற்கு தங்கப்பதக்கம் பெற்று தந்து சாதனை படைத்தார் சதுரங்க நாயகி மியாரா க்ரூய்ஸ் டேவிட்சன்!

கூச்சிங், ஜூலை 3-
அண்மையில் சரவாக் மாநிலத்தில் MSSM எனப்படும் மலேசிய பள்ளி விளையாட்டு மன்றத்தின் சதுரங்க போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பங்கேற்ற நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவி மியாரா க்ரூய்ஸ் டேவிட்சன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கிங்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் (சிரம்பான் 2 ) படித்து வருகிறார்.

தேசிய பள்ளிகள் இடையிலான சதுரங்க போட்டியில் 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்ற இவர் பல சவால்களுக்கு மத்தியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும் 35 ஆண்டுகளுக்கு பிறகு நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு சதுரங்க போட்டியில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மியாராவின் தேசிய மற்றும் சர்வதேச சாதனைகள் அளப்பரியது எனலாம்.

2026 ஆம் ஆண்டு சரவாக் மாநிலம் மிரியில் நடைபெற்ற MSSM தேசிய சதுரங்கப் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட பெண்கள் (U12 Girls) பிரிவில் தேசிய சாம்பியனாக தங்கப் பதக்கம் வென்றார் இதற்கு முன் பல போட்டிகளில் அசத்தியுள்ளார்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக நெகிரி செம்பிலான் மாநிலத்திலிருந்து U12 பெண்கள் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை இவர் ஏற்படுத்தி இருக்கிறார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு சீனாவின் ழுஹாய் நகரில் நடைபெற்ற 9ஆவது கிழக்கு ஆசிய இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் (EAYCC) போட்டிக்காக மலேசிய சதுரங்க சம்மேளனம் (MCF) தேர்வு செய்த அதிகாரப்பூர்வ மலேசிய வீராங்கனையாக இவர் பங்கேற்றார்.

அணிப் பிரிவில் மலேசியாவிற்காக 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

பின்னர் 2025 ஆம் ஆண்டு கசகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற FIDE உலக கேடேடா சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியாவின் அதிகாரப்பூர்வ வீராங்கனையாகப் பங்கேற்றார்.

உலகின் 88 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்ற மிக உயரிய சர்வதேச போட்டியாகும்.

28ஆவது காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக U12 பெண்கள் பிரிவில் பங்கேற்றார்.

இதில் 17 நாடுகள் கலந்து கொண்டன.
2025 ஆம் ஆண்டு மலேசிய சதுரங்க சம்மேளனம் (MCF) நடத்திய தேசிய இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் (NYCC) போட்டியில் U12 பெண்கள் பிரிவில் தேசிய சாம்பியனாக தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார்.

சர்வதேச சதுரங்க போட்டியில் தரவரிசை பெற்ற வீராங்கனை என்ற முறையில் மலேசியாவின் சர்வதேச சதுரங்க பிரதிநிதியாக இவர் விளங்குகிறார்.

இசையில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது பியானோ தரம் 2 முடித்து, தரம் 3 பயின்று வருகிறார்.

மேலும் கோல்ஃப் பயிற்சியும் பெற்று வருகிறார்.

ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் பாட்டு பாடுவதில் இவருக்கு தனி ஆர்வம்

தமிழ் , ஆங்கிலம், மலாய் தவிர்த்து மாண்டரின் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர்.

மியாரா தனது 8வது வயதில் தனது சகோதரர் ரோமனுடன் இணைந்து சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் பொழுதுபோக்காகத் தொடங்கிய இந்த விளையாட்டு, பின்னர் அவரது வாழ்க்கையின் மிகுந்த ஆர்வமாக மாறியது.

தனது சதுரங்கப் பயணத்தில், தனது சகோதரரே தனக்கு மிகப்பெரிய ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர் என்று மியாரா அடிக்கடி கூறுகிறார்.

தான் நேசிக்கும் சதுரங்க விளையாட்டில் தொடர்ந்து முன்னேறி, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் உறுதியான மனப்பாங்கு இருந்தால் சிறந்த சாதனைகளை அடைய முடியும் என்பதை மற்ற இளம் வீரர், வீராங்கனைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்பதே மியாராவின் இலக்காகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles