

கோலாலம்பூர், செப் 23-
பினாங்கு மாநில பெண்கள் கால்பந்து குழு நட்பு முறை ஆட்டத்தில் சிலாங்கூர் சோக்கர் ஸ்கூல் மாணவிகளுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நேரடி பலப்பரீட்சை நடத்துகிறது.
இவ்விரு குழுக்களும் இடையிலான நட்புமுறை ஆட்டம் வரும் 28-9-2025 ஆம் தேதி Kompleks Sukan SUK Selangor அரங்கில் நடைபெறுகிறது.

இது வெறும் போட்டியை விட நமது இந்திய பெண்களின் தன்னம்பிகையை ஊட்டும் ஒரு தளமாக விளங்குகிறது என்று பினாங்கு இந்தியர் கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
கால்பந்தில் நமது இளம் பெண்களின் ஆர்வம், குழுப்பணி மற்றும் வரலாற்றை உருவாக்குவது பற்றியது.
இந்த அற்புதமான சவாலை அவர்கள் ஏற்கும்போது அவர்களுக்குத் தகுதியான அனைத்து தார்மீக ஆதரவையும் வழங்குவோம்.

அனைத்து கால்பந்து பிரியர்கள் தங்களது குடும்பத்தினருடன் பினாங்கு இந்தியப் பெண்களை உற்சாகப்படுத்த வாருங்கள்.
உங்கள் இருப்பும் ஊக்கமும் அவர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
இதனிடையே வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு Shah Alam lakeside Training Center திடலில் நடைபெறும் நட்பு முறை ஆட்டத்தில் பினாங்கு பெண்கள் குழு சிலாங்கூரை சேர்ந்த Future FA கிளப்புடன் மோதுகிறது.
இந்த ஆட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்க திரண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.