
பத்தாங் காலி செப் 23-
வரும் நவம்பர் மாதம் எஸ்பிஎம் தேர்வில் அமரும் இந்திய மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கேட்டுக் கொண்டார்.
எஸ்பிஎம் தேர்வில் அனைத்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மெட்ரிகுலேஷன் இடம் கிடைக்கும்.
அதே சமயம் நமது மாணவர்கள் தமிழ்ப் மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற வேண்டும்.

லட்சியக் கனவோடு படித்து சிறப்பு தேர்ச்சி பெறுங்கள்.
ஒரு மாணவனின் எதிர்காலத்திற்கு கல்வியே அடித்தளம்.
பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்.
என் தந்தையார் நடராஜன் அவர்கள் ஒரு தபால்காரர்.
நானும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன்தான்.
கஷ்டப்பட்டு படித்து மருத்துவராகி பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினேன்.
ஆகவே நமது இந்திய மாணவர்கள் லட்சியத்துடன் எஸ்பிஎம் தேர்வை எழுதி சிறந்த தேர்ச்சி பெற மனதார வாழ்த்துகிறேன் என்றார் அவர்.

பத்தாங் காலியில் உள்ள அந்தாரா காபி எஸ்பிகேர் மண்டபத்தில் உலு சிலாங்கூர் மாவட்ட இந்திய மாணவர்களுக்கான எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி பயிற்சி பட்டறையை நிறைவு செய்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்திய மாணவர்களுக்காக மண்டபத்தையும் உணவையும் வழங்கிய டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் அவர்களுக்கு சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ் தமிழ்மொழி பிரிவு உதவித் தலைவர் செங்குட்டுவன் வீரன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த பயிற்சி பட்டறையில் 107 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பிரபல எழுத்தாளர் கவிஞர் சிவலெனின் எழுதிய மலாயா கணபதி நூல் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

