உலு சிலாங்கூர் மாவட்ட இந்திய மாணவர்களுக்கான எஸ்.பி.எம். தமிழ் மொழி பயிற்சி பட்டறை சிறப்பாக நடைபெற்றது!

காளிதாஸ் சுப்ரமணியம் மா. பவளச்செல்வன்

பத்தாங் காலி, செப் 23-
வரும் நவம்பர் மாதம் எஸ்.பி.எம். தேர்வு நெருங்கி வரும் வேளையில் இந்திய மாணவர்கள் தமிழ்ப் மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற சிறப்பு வழிகாட்டி பயிற்சி பட்டறைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது

அந்த வகையில்
உலுசிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த
107 இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு எஸ் பி.எம். தமிழ்மொழி பயிற்சி பட்டறை இன்று பத்தாங் காலி விஸ்மா எஸ்.பி.கேர். அந்தாரா காபி மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த பயிற்சி பட்டறை க்கான செலவுகளை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையை சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ் மொழிப் பிரிவு உதவி இயக்குநர் செங்குட்டுவன் வீரன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் குழு , உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகா ஆகியவற்றுடன் இணைந்து இந்த பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்யப்பட்டது .

உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, கிராமத் தலைவர் முரளி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சிவலெனின் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles