மலேசியாவில் பரதக் கலைக்கு உயிருட்டப்டுகிறது! டாக்டர் சாய் ராஜராஜேஸ்வரி புகழாரம்

ஈப்போ, செப் 23-
மலேசியாவிலும் இந்த பரதக் கலைக்கு ஊயிருட்டோப்பட்டு வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று தமிழகம் திருச்செந்தூர் நாட்டியப் பள்ளியின் ஆசிரியை டாக்டர் ஸ்ரீமதி சாய் ராஜராஜேஸ்வரி புகழாரம் சூட்டினார்.

பல இனம் சமயத்தவர்கள் வாழும் இந்த நாட்டில் இந்தியர்களின் பாரம்பரிய நடனத்தை கட்டு காத்து வரும் மலேசிய இந்தியர்களின் சேவை போற்றத்தக்கது என்று குறிப்பிட்டார்.

ஈப்போவில் உள்ள ஸ்ரீ ஏ. கே. எஸ். மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற டவினா நாயர் சத்தியின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு ஆற்றிய உரையில் இவ்வாறு பேசினார்.

பரதம் என்பது பாவம் (உணர்ச்சி வெளிப்பாடு), ராகம் (இசை) மற்றும் தாளம் (ரிதம்) ஆகிய மூன்றும் இணைந்த ஒரு செவ்வியல் கலை வடிவமாகும்.

இந்த பரதநாட்டியம் இந்தியர்களின் பாரம்பரிய நடனமாகம் இந்த நாட்டியம் தொடர்ந்து மலேசியாவில் நிலை நாட்டபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஈப்போவில. கடந்த 30 ஆண்டு காலமாக இங்கி வரும் பெர்சத்துவன் கெபுடயான் சங்கீத பரத நாட்டிய கலாஞ்சலி நாட்டியப் பள்ளியில் பரம் கற்று வரும் டிவினா நாயர் சத்தியின் பரத நாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த நாட்டியப் பள்ளியின் ஆசிரியரான ஸ்ரீ மதி உஷா நந்தினி கிருஷ்ணசாமியிடம் பரதம் கற்று அரங் கேற்றம் கண்டார் .

இம்மாணவி 4 வயதில் இருந்து இந்த பரதக் கலையை கற்று வந்துள்ளார்.
தமது 14 ஆவது வயதில் அரங்கேற்றம் கண்ட இவர் மிகவும் துடிப்பான மாணவி பரத நாட்டியத்தில் எதிர் காலத்தில் சிறந்து விளங்குவார் என்று உஷா நந்தினி பாராட்டினார் .

கடந்த 30 ஆண்டுகாலம் இந்த பரத நாட்டிய வகுப்பை நடத்தி வருவதாகவும் , இது 16 ஆவது பரத நாட்டிய அரங்கேற்றம். தொடரந்து பல மாணவிகள் அரங்கேற்றம் காண உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நாட்டில் இந்த பரதக் கலை மேலும் நிலை நாட்ட மேலும் அதிகமான மாணவர்கள் பயிலவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பேரா மாநில ம. இ. கா தலைவர் டான்ஸ்ரீ எம். ராமசாமி கலந்து சிறப்பித்துடன் அவர் வழங்கிய வாழத்துரையில் இந்த கலை நமது
நாட்டில தொடர்ந்து நிலை நாட்ட பெற்றோர்கள் பரத நாட்டிய வகுப்பு அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அந்த வகையில் இந்த நிகழ்வில் அரங்கேற்றம் கண்ட மாணவி டிவினா நாயர் சத்தியின் நாட்டியம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் , அவரை வெகுவாக பாராட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles