கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு

கரூர்: கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பற்றி கரூர் அரசு மருத்துவமனையை தயார் நிலையில் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

கரூர் ஆட்சியரிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கரூருக்கு அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகள் உடனடியாக செல்ல முதல்வர் உத்தரவு அளித்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.20) நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு பேசிய விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குடும்பத்தை வைத்து தமிழ்நாட்டை கொள்ளையடித்து வருகிறார் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மதியம் நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் கரூரில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். விஜய் பரப்புரை பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் மூச்சி திணறி கீழே விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles