
சென்னை: செப் 28-
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
8 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்த தகவல் அறிந்து துயரமும் வேதனையும் அடைந்தேன் எனவும் கரூர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.