ஒருபடை ஆல்பம் வெளிநாட்டு விழாவுக்கு மலேசிய புளூ பிரதர்ஸ் சமூக நல இயக்கம் – வணக்கம் இந்தியா ஆதரவு!

கோலாலம்பூர் செப் 28-
மலேசிய மண்ணின் மைந்தர்கள் கைவண்ணத்தில் உருவான ஒருபடை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

கோலாலம்பூர் விஸ்மா டி.ஆர்.ஏ.எக்ஸ். மண்டபத்தில் நடைபெற்ற ஆல்பம் வெளியீட்டு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அந்த வகையில்
Blues Brothers And Welfare Association Malaysia) (BBW) இயக்கத்தின் இளைஞர் அணி தலைவர்
YBhg. Datuk Dr. M. Shankar, Bala(India Blues) மற்றும் Samad (Pengerusi Malaysia Blues ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவுக்கு வணக்கம் இந்தியாவும் ஆதரவு வழங்கியது.

ஒருபட ஆல்பத்தில் மலேசிய மண்ணின் மைந்தர்களின் ஏழு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

ஆல்பம் வெளியீட்டு விழா சீரும் சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டத்தோ டாக்டர் எம். சங்கர் தெரிவித்தார்.

மண்ணின் மைந்தர்களின் படைப்புகளுக்கு மலேசிய ரசிகர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்.

தமிழக இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு ஈடாக மலேசிய கலைஞர்கள் விளங்கி கொண்டிருக்கிறார்கள்.

மலேசிய மண்ணின் மைந்தர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஒருபடை ஆல்பம் அமைந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று டத்தோ எம். டாக்டர் சங்கர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles