
காளிதாஸ் சுப்ரமணியம்
ரவாங், செப் 29-
ரவாங் சோன் 15 கவுன்சிலர் எலிஸ் சூ நேற்று 100 இந்திய குடும்பங்களுக்கு ரவாங் மைடினில் தீபாவளி பற்று சீட்டுகளை வழங்கினார்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் தனது பகுதியில் உள்ள இந்தியர்களுக்கு தன்னலம் கருதாமல் உதவிகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவ்வாண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அவர் நேற்று 100 இந்திய குடும்பங்களுக்கு தலா 100 வெள்ளி மதிப்புள்ள பற்று சீட்டுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் WWRC (M) Sdn.Bhd நிறுவனத்தின் அதிரிகாரி ஊய் ஸ்வீ தியேன் மற்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் தீபாவளி மட்டும் இல்லாமல் சீனப் புத்தண்டு, ஹரி ராயா, கிறிஸ்துமஸ் என முக்கிய பெருநாட்களை முன்னிட்டு தாம் மக்களுக்கு இந்த உதவி தொகை பற்றுச்சீட்களை வழங்கி வருவதாக எலிஸ் சூ கூறினார்.
மேலும் நான் பொறுப்பேற்றிருக்கும் பகுதி மக்களுக்கு சேவைகளை சிறப்புடன் செயல்படுத்த தன்னுடன் சேர்ந்து தன் குழுவினரும் அயராது உழைக்கின்றனர் என்றார் எலிஸ்.
பற்றுச்சீட்டுகளை பெற்று கொண்ட மக்கள் ரவாங் மைடின் பேரங்காடியில் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டதுடன் கவுன்சிலர் எலிஸ் சூவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.