
ஈப்போ செப் 30-
தேசிய முன்னணிக்கு ஐபிஎப் கட்சி தொடர்ந்து முழு ஆதரவை கொடுக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று
அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எல். லோகநாதன் கூறினார்.
ஐபிஎப் கட்சி டான்ஸ்ரீ எம்ஜி பண்டிதன் அவர்களால் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே அவர் தேசிய முன்னணிக்கு தான் முழு ஆதரவை வழங்கி வந்தார்.
அதே வேளையில் தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக ஐபிஎப் இணைய வேண்டும் என்பதே அவரின் இலக்காக இருந்தது.
ஆக டான்ஸ்ரீ பண்டிதன் காட்டிய வழியை நாங்களும் பின் தொடர்வோம்.
குறிப்பாக தேசிய முன்னணிக்கு ஐபிஎப் கட்சி தொடர்ந்து முழு ஆதரவு வழங்கும்.
பேரா மாநில ஐபிஎப் கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு பின் செய்தியாளர்களிடம் டத்தோ லோகநாதன் இவ்வாறு கூறினார்.
இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் ஐபிஎப் கட்சி தொடர்ந்து அம்மக்களின் உரிமைக்காக போராடும்.
அதே வேளையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கும் கட்சி தயாராக வருகிறது.
இதனால் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என்று அவர் சொன்னார்.