
லண்டன், அக் 5-
இங்கீலிஷ் பிரிமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் லிவர்பூல் கிளப்பை வீழ்த்தியது .
இது லிவர்பூல் கிளப்புக்கு இரண்டாவது தோல்வியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய அர்செனல் 2-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேமரை வீழ்த்தியது.
சொந்த அரங்கில் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டேர்லேண்ட் கிளப்பை வீழ்த்தியது.
7 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
லிவர்பூல் 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.