
ஷா ஆலம், அக் 5- நாட்டில் தமிழ் ஊடகத் துறைக்கு பெரும் பங்காற்றிய மூத்த தமிழ் பத்திரிகையாளர்கள் சிலாங்கூர் மாநில அரசு சார்பில் கெளரவிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கூறியிருப்பதை சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் வரவேற்றார்.
தகுதி உள்ள மூத்த பத்திரிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை அரசிடம் பரிந்துரைக்கும் பொறுப்பு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான
பள்ளி பேருந்து கட்டணம் வழங்கும் நிகழ்வில் மூத்த தமிழ் பத்திரிகையாளர்களையும் சிறப்பிக்கும் பிரத்தியேக அங்கம் இடம் பெறுவது மிகவும் பாராட்டுக்குரியது என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
பத்திரிகையாளராகள், குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் குருமார்களுக்கு சமமானவர்கள். அவர்கள் சமுதாயத்திற்கும் தமிழ் மொழிக்கும் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றனர் என்பதில் ஐயமில்லை.
இந்த நிகழ்வானது மூத்த பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரத்தையும் இளம் பத்திரிகையாளர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்குரிய உத்வேகத்தையும் வழங்கும் டாக்டர் சுரேந்திரன் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

