
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை பூலோ,அக் 5-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள 16,000 இந்திய குடும்பங்களுக்கு அன்பு உணவு கூடைகள் வழங்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் இரமணன் இன்று அறிவித்தார்.
AIM எனப்படும் அமனா இக்தியார் மலேசியா வழங்கிய 16,600 அன்பு உணவு கூடைகள் — தீபாவளி நம்பிக்கையை ஒளிரச் செய்கிறது.
வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஒளிரச் செய்வதற்காக, தொழில் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் தறை அமைச்சு அமானா இக்தியார் மற்றும் அமானா இக்தியார் மலேசிய மலேசியா “தீபாவளி வணக்கம் மடானி” நன்கொடைத் திட்டத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் வாழும் வசதி குறைந்த இந்தியக் குடும்பங்களுக்கு மொத்தம் 16,600 அன்புக் கூடைகளை வழங்குகிறது.

இந்தத் திட்டம் அமைச்சின் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். இதன் நோக்கம், பொருளாதார சிரமத்தில் உள்ள குடும்பங்கள் தீபாவளி திருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட தேவையான அடிப்படைப் பொருட்களை வழங்குவது ஆகும் என்று அவர் சொன்னார்.
இந்த அன்புக் கூடைகளில் அரிசி, சமையல் எண்ணெய், முறுக்கு மாவு, மசாலை தூள், பருப்பு உட்பட தீபாவளி தயாரிப்புகளுடன் தொடர்புடைய பல உணவுப் பொருட்கள் அடங்குகின்றன.
இன்று முதல் கட்டமாக, சுங்கை புலோ நாடாளுமன்றத் தொகுதி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு அன்பு உணவு கூடைகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில், டத்தோஸ்ரீ இரமணன் தலைமையில் 8 லாரிகளில் உணவு கூடைகள் அனுப்பப்பட்டன.

டத்தோஸ்ரீ (flag-off) கொடி அசைத்து லோரிகளை அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை நாடு முழுவதும் நன்கொடைகளை விநியோகிக்கப் புறப்பட்டன.
இந்த நிகழ்வில், AIM நிறுவனத்தின் நிதி துணை மேலாண்மை இயக்குநர் நோர்ஷரிசல் மாஷாஹ்ரின் மற்றும் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணனின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன் அவர்களும் கலந்து கொண்டனர்.