

கோலாலம்பூர் அக் 6-
புக்கிட் கியாரா தோட்டத்தில் வாழ்ந்த தோட்ட பாட்டாளிகள் இன்னமும் மண் வாசனை நேசித்த வண்ணம் புக்கிட் கியாரா நீண்ட வீடுகளில் வாழ்ந்த வருகின்றனர்.
புக்கிட் கியாரா முன்னாள் கால்பந்து விளையாட்டாளர் களின் நினைவாக ஆண்டுதோறும் தீபாவளி காலக் கட்டத்தில் நட்பு முறை போட்டி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற நட்பு முறை கால்பந்து போட்டியில் மண்ணின் மைந்தர்கள் பங்கேற்றனர்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணனின் சிறப்பு அதிகாரி விக்னேஸ்வரன் வருகை தந்து சிறப்பித்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற செல்வம் அணியினருக்கு அவர் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.
நட்பு முறை கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் கிள்ளான் வேலி கால்பந்து கிளப் தலைவர் இராஜன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.