
கேரித் தீவில் கிட்டத்தட்ட 24 ஆலயங்கள் மிகப் பெரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளன.இவ்விவகாரத்தில் அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கேள்வியை எழுப்பினார்.
கடந்த காலங்களில் கேரித் தீவில் 4 தோட்டங்கள் இருந்தன. இதனால் அங்கு கிட்டத்தட்ட 24 ஆலயங்கள் உள்ளன. இந்நிலையில் அப் பகுதியில் 48,000 ஏக்கர் நிலப்பரப்பில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
துறைமுகத்திற்கான திட்டமும் அங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் அவ்வாலயங்களில் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.
பெரும்பாலான தோட்ட ஆலயங்களுக்கு நிலப்பட்டா கிடைக்காது. ஏனென்றால் தோட்ட நிர்வாகங்கள் தான் அவ்வாலயங்களை பராமரித்து வருகின்றன.
இதனால் நிலப்பட்டா இல்லாததால் அவ்வாலயங்களில் நிலை என்னவாகும்? அரசாங்கம் எல்லா ஆலயங்களுக்கும் நிலம் கொடுக்குமா என்பது தான் மிகப் பெரிய கேள்வியாகும்.
இதனால்தான் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு நிலப்பட்டா கொடுக்க வேண்டும் என இந்து சங்கம் வலியுறுத்தி வருகிறது.அதே வேளையில் 200க்கும் மேற்பட்ட ஆலயங்கள் திவால் இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதற்கு முறையான நிர்வாகம் செய்யப்படாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இப்படி இந்து ஆலயம், சமயம் உட்பட பல பிரச்சினைகள் அங்கு நிலவி வருகிறது.இப்பிரச்சினைகள் எல்லாம் அமைச்சரவை சென்று சேர்வது இல்லை.
குறிப்பாக தமிழ் பேசும் அமைச்சர்கள் அமைச்சரவையில் இல்லை. இப் பிரச்சினைகளுக்கு என்னால் அரசாங்கம் உரிய தீர்வை காண வேண்டும் என்று தங்க கணேசன்