

கோலாலம்பூர் அக் 7-
கம்போடியா அங்கோர் வாட் தமிழ்ச் சங்கமும் சீனு ஞானம் டிராவல்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் உலக பேரரசன் இராசேந்திர சோழன் கடாரம் வென்ற ஆயிரமாவது மாநாடு வரும் நவம்பர் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சியம் ரிப் நகரில் உள்ள பாயான் ஈரா தங்கு விடுதி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
அங்கோர் வாட் தமிழ்ச் சங்கம் தலைவர் த.சீனிவாசராவ் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆர். ஞானசேகரன் ஆகியோர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.
உலக பேரரசன் இராசேந்திர சோழன் *கடாரம் வென்ற ஆயிரமாவது ஆண்டுவிழா மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தந்தை ராசராசனின் தஞ்சாவூர் பெரிய கோவிலும் மகன் ராசேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரமும் காலங்களை கடந்து புகழ்பெற்ற சின்னங்களாக விளங்குகின்றன.
இந்திய வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி கடல் கடந்து பல தேசங்களை வென்ற மாமன்னன் முதலாம் ராசேந்திர சோழன்; தந்தையை மிஞ்சிய தனயனாக உலக அளவில் தமிழரின் பெருமையை நிலை நாட்டினார்.
அந்த வகையில் கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அங்கோர் வாட் தமிழ்ச் சங்கம் தலைவர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.
இம்மாநாட்டின் மலேசிய தலைமை பொறுப்பாளராக , “திருக்கயிலாயம் சந்நிதானம்” – மற்றும் குருகுலத்தின் தோற்றுனர் குரு அமரானந்த ஹம்சா நியமிக்கப்பட்டுளளார்.
மலேசிய பேராளர்கள்
014-9681174 என்ற எண்ணில் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 600 பேராளர்கள் இதுவரை பதிந்து கொண்டுள்ளனர் கலந்து கொள்கிறார்கள் . குறைந்தது ஆயிரம் பேராளர்கள் கலந்து கொண்டுள்ளார் என்று எதிர்பார்க்கிறோம்.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ சகாதேவன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தில் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா, தமிழ் அமைச்சர் பெருமக்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே இந்த மாநாடு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டார்