மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் வீதி ஊர்வலத்துடன் நவசக்தி நவ விழா விமரிசையாக முடிவடைந்தது

கோலாலம்பூர், அக் 7-
நவராத்திரியை முன்னிட்டு கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் சார்பில் நவசக்தி நவ விழா செந்தூல் தண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் 9 தினங்கள் மிகவும் விமரிசையாக நடைபெற்றது என்று இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வரும் கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் சமய பணியை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

செப்டம்பர் 30 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் அக்டோபர் 1 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலமும் அக்டோபர் 2 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் வீதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து சிறப்பித்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ஐ.ரமணி, துணை தலைவர் டாக்டர் தேவிகா, செயலாளர் அமரேசன், துணை செயலாளர் முருகராஜ், பொருளாளர் கருணாகரன், செயலவை உறுப்பினர்கள் மீனா, ஹேமாலதா, கண்ணன், ராமு, துளசி குணசேகரன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தினர்.

அடுத்த ஆண்டும் நவசக்தி நவவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படும் வேளையில் உபயக்காரர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சேகர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles