சூரியன் திட்டத்திற்கு 54.5 மில்லியன் ஒதுக்கீடு: டத்தோ புத்ரி சிவம் வரவேற்பு

கோலாலம்பூர் -, அக் 8-
மலேசிய இந்திய வர்த்தகர்களை உதவும் நோக்கில் சூரியன் திட்டத்தின் கீழ் 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக தொழில் முனைவோரும் பெர்னாஸ் வாரிய உறுப்பினருமான டத்தோ புத்ரி சிவம் வரவேற்றுள்ளார்.

இதற்கு முன்னர்
பேங்க் ரக்யாட்டின் கீழ் பிரிவ்-ஐ, தெக்குன் நேஷனல் கீழ் ஸ்பூமி கோஸ் பிக், எஸ்எம்இ கோர்ப்பின் கீழ் ஐபேப், அமானா இக்தியாரின் கீழ் பெண் திட்டம், எஸ்எம்இ வங்கியின் கீழ் வணிகம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டங்கள் அனைத்தும் இந்திய சமூக தொழில்முனைவோருக்கு மொத்தம் 357 மில்லியன ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக டத்தோஸ்ரீ இரமணன் அறிவிப்பு செய்துள்ளார்.

இதன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர் பயன் அடைந்துள்ளனர்..

இந்நிலையில் இன்று இந்திய சமூகத்திற்கு சூரியன் திட்டத்தை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் அறிவித்துள்ளார்.

பெர்னாஸ் உடன் தேசிய உரிமையாளர் சுற்றுச்சூழல் அமைப்பில் மிகவும் வெற்றிகரமான இந்திய சமூக தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான இந்திய சமூக அடிப்படையிலான உரிமையாளர் முயற்சியான சூரியன் திட்மாகும்.

இந்த திட்டம் நாடு முழுவதும் 1,000 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

இதில் 20 வருங்கால பிரான்சாய்ஸ் வர்த்தகர்கள், 100 வருங்கால உரிமையாளர்கள், 400 சிறு தொழில்முனைவோர், 500 வேலை வாய்ப்பு பங்கேற்பாளர்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

இதற்காக 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ இரமணன் கூறியிருப்பதை பெரிதும் வரவேற்பதாக டத்தோ புத்ரி சிவம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles