

கோலாலம்பூர் அக் 14-
மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு பக்கப் பலமாக இருந்து பல உதவிகளை வழங்கி வருகிறது என்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் இன்று அறிவித்தார்.
இந்து கோவில்களுக்கு 2 கோடி வெள்ளி மானியம், இந்திய புதிய கிராமங்கள் பராமரிக்க நிதி, தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் உட்பட பல வகைகளில் மடானி அரசாங்கம் உதவி வழங்கி வருகிறது.
மேலும் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 30,000 வெள்ளி மானியம் வழங்குவதாக ஙா கோர் மிங் அறிவித்தார்.

இந்த 30,000 வெள்ளி நிதியில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் 200 உறுப்பினர்களுக்கு தலா 150 வெள்ளி தீபாவளி அன்பளிப்பாக வழங்கப்படும் என்று தமிழ் ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் அவர்கள் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து இந்திய சமுதாயத்திற்கு அமைச்சு மேற்கொண்டு வரும் பணிகளை குறித்த விளக்கம் அளித்தார்.
இந்த சந்திப்பில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 150 வெள்ளி தீபாவளி அன்பளிப்பு வழங்குவதாக அறிவித்தார்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்
சங்கத்திடம் 30,000 வெள்ளி வழங்கப்பட்டதும் அந்த நிதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
அமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் கூறினார்

