நெகிரி ஆட்சிக்குழுவில்
இடம் பெறப்போகும்
புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் யார்?

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள்குமார் இன்று முதல் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் அரசியல் செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.

அமைச்சரின் அரசியல் செயலாளராக பதவி ஏற்றதால் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவருக்கு பதிலாக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெறப்போகும் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் யார் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினரும் சமுதாயப் போராட்டவாதியுமான பி. குணசேகரன் புதிய ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி ஏற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

நீண்ட கால அரசியல் போராட்டவாதியான குணசேகரன் பல போராட்டங்களையும் சவால்களையும் சந்தித்து வெற்றி நடை போட்டவர்.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு இவர் மிகவும் பொருத்தமானவர் என்று வர்ணிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles