விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கு இடமில்லை!
எனது நிலைப்பாடு
கடுமையாக இருக்கும்…..
துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சூளுரை

இந்தியர்களின் பொருளாதார நன்மைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கைக்க.யும் எதிராக தனது நிலைப்பாடு மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு கழகத்தின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

இதில் எந்த ஒரு சமரசம், விட்டுக்கொக்கும் நிலைபாட்டிற்கு தாம் இடம் அளிக்கப்போவதில்லை.

கூட்டுறவு கழகங்களின் நிதி நிர்வாக முறைகேடும் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டுறவு கழகங்களில் முதலீடு செய்தவர்கள் பெரும்பான்மையினர் ஏழை எளிய மக்கள்.

அடித்தட்டு இந்திய மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு கழகங்கள் அந்த அடித்தட்டு மக்களின் உண்மையான உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு தனது முழு ஆதரவு என்றென்றும் இருக்கும்.

மாறாக அவர்களது செயல் நடவடிக்கைகள் இந்திய மக்களின் உணர்வுகளின் நலனுக்கு எதிராக அமைந்திருந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் தான் தயங்க போவதில்லை என்று அவர் சூளுரைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles