வலுவான மலாய் கட்சிகளுடன் இருக்க வேண்டும்; அம்னோவை மட்டும் மஇகா நம்பியிருக்க முடியாது:

மீண்டும் முக்கியத்துவம் பெற மஇகா வலுவான மலாய் கட்சிகளுடன் இருக்க வேண்டும். அம்னோவை மட்டும் நம்பியிருக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர் ஷாபுடின் ஹுசைன் இதனை கூறினார்.

தேசிய முன்னணியை விட்டு வெளியேற மஇகா எடுத்த முடிவு சரியான முடிவாகக் கருதப்படுகிறது. இதனால் இந்தியக் கட்சியான மஇகா மீண்டும் வலுவாகவும் முக்கியத்துவமாகவும் மாற முடியும்.

உண்மையில் தற்போதுள்ளதை விட சிறந்த செயல்திறனை அடைய மஇகாவும் அதே நடவடிக்கையை எடுக்க வேண்டும். அம்னோ இனி மலாய்க்காரர்களுக்கு வலுவான கட்சியாக இல்லாததால், மஇகா வெற்றி பெற அம்னோவை நம்பியிருக்க முடியாது.
மறுபுறம் அம்னோவின் இடத்தை  தற்போது பாஸ், பெர்சத்து கட்சிகள் கைப்பற்றி விட்டன.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களின் ஆதரவில் சுமார் 70 சதவீதத்தை அக்கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

பாஸ், பெர்சத்துவின் ஆதரவுடன் மட்டுமே மஇகா ஒரு காலத்தில் வலுவான அம்னோவின் ஆதரவைப் பெற்றபோது பெற்ற அளவுக்கு அதிகமான இடங்களை மீண்டும் வெல்ல முடியும் என்று அவர் தனது முகநூல் வாயிலாக கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles