

அருள்மிகு ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் தாமான் புக்கிட் மேவா, தம்போய், ஜோகூர் பாரு தலைவர் திரு கண்ணன் ஆதரவில் கம்போங் செபக்காட் பகுதி மக்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.
கப்போங் செபக்காட் தேவி ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யபட்ட இந்த நிகழ்வில் கூலாய் தொகுதி பெரிக்கத்தான் நெசினால் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கலந்து கொண்டது இங்கே குறிப்பிடதக்கது.
அவ்வட்டார மக்களின் தேவை அறிந்து இந்த உதவிக்கு ஏற்படு செய்த தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய தலைவர் திரு சிவகுமார்க்கு அந்த வாட்டர மக்களின் சார்பில் பி40 பிரிவை சேர்ந்த 20 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைதிரு கண்ணன் பாராட்டினர்.
இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவிய ஆலய உறுப்பினர்கள், பக்தர்கள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரும் இணைந்து அன்பு, கருணை, பரிவு ஆகியவற்றை பகிர்ந்திடுவோம் என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

